ஆழ்கடல் முத்துக்கள்

தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவி தமிழ் இனமும், தமிழும் எழுச்சி பெற்றுள்ள இச்சூழலில் தமிழ் ஆர்வலர்களுக்கு உதவும் நோக்கில் திரட்டப்பட்ட தொகுப்பே இம்முத்துக்கள். ஆழ்கடலில் பெறும் முத்துக்களைப் போல தமிழ்க்கடலில் மூழ்கி எடுத்த முத்துக்களே இந்த ஆய்வுகள்.

தமிழாய்வு கல்விப்புலம் சார்ந்த நிலையில் பல்கலைக்கழகங்களிலும், அதன் இணைப்புக்கல்லூரிகளிலும் நிகழ்த்தப்படுகிறது. இவ்வாய்வுகள் அனைத்தும் அங்குள்ளவர்களால் மட்டுமே அறியப்படுகிறது. பிறர் அறிய வாய்ப்பில்லை. இதன் காரணமாகச் செய்த தலைப்பிலேயே, பொருளிலேயே ஆய்வுகள் செய்யும் போக்கு இன்று அதிகம் நிலவுகிறது. இக்குறையை நீக்குவதற்காகவும், தமிழாய்வில் புதிய சிந்தனையை உருவாக்குவதற்காகவும் தொகுக்கப்பட்டதே இவ்வாய்வேடுகள். இதில் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகம், திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக ஆய்வுகள் பற்றிய செய்திகள் இடம்பெற்றுள்ளன.

வாசியுங்கள்!
அதனைச் சுவாசியுங்கள்!

2 கருத்துகள்:

Koman Sri Balaji said...

இதில் ஆய்வு கட்டுரைகளையும் வெளியிடலாமே......

தாய் said...


மிக நல்ல முயற்சி!தொடர்ந்து செயல்படுங்கள்.இந்த முயற்சி உலக அளவில் வெளிவரும்அனய்த்துத்துறை முனைவர்ப் பட்ட ஆய்வுகளையும் தமிழில்கொண்டுவரும் முயற்சியாக மலரவேண்டும்!
பூந்துறயான்,
தமிழியல் ஆய்வு அறக்கட்டளை,
கள்ளிப்பட்டி.