பாரதிதாசன் பல்கலைக்கழக பி.எச்.டி. ஆய்வேடுகள்

இலக்கண ஆய்வேடுகள் : 3

1. தமிழ் அணியிலக்கணத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
சு.குலாமணி-1989
நெறி:க.ரத்தினம்
1. தமிழ் அணியிலக்கணத்தின் தோற்றம்
2. அணி இலக்கண நூல்கள்
3. பொதுவணி வளர்ச்சி
4. பொருளணி வளர்ச்சி
5. சொல்லணி வளர்ச்சி
6. அணி உத்தி
7. இன்றைய அணிநிலை

2. தொல்காப்பிய கிளவியாக்கத்தின் அமைப்பும் பிற்கால இலக்கண நூல்களில் அதன் தாக்கமும்
ஆ.பாலன்-92
நெறி:இரா.செல்வகணபதி
1. தமிழில் சொல்லிலக்கண வளர்ச்சி வரலாறு
2. கிளவியாக்கத்தின் அமைப்பு
3. உரையாசிரியர்கள் பார்வையில் கிளவியாக்கம்
4. பிற்கால இலக்கண நூல்களில் கிளவியாக்கம்
5. கிளவியாக்கமும் தற்கால மொழியியல் கோட்பாடுகளும்

3. தமிழ் இலக்கணங்களில் கல்வியல் சிந்தனைகள்

து.சேகர்-1999
நெறி:சண்முக செல்வகணபதி
1. கல்வியல் சிந்தனைகள்
2. தொல்காப்பியரின் கல்வியல் சிந்தனைகள்
3. நன்னூலின் கல்வியல் சிந்தனைகள்
4. உரையாசிரியர்களின் கல்வியல் சிந்தனைகள்
5. ஒப்பீட்டு நோக்கில் கல்வியல் சிந்தனைகள்

சங்க இலக்கிய ஆய்வேடுகள் - 5

4. சங்க இலக்கியங்களில் கற்புக் கோட்பாடு
இல.பொம்மி-1994
நெறி: மு.இளமுருகன்
1. கற்புக்கோட்பாடு
2. கற்புக் கோட்பாடும் சமூகப் பொருளாதாரப் பின்னணியும்
3. சங்க இலக்கியங்களில் கற்பு
4. கற்புப் பாடல்கள் காட்டும் பண்பியல்
5. பிற்கால இலக்கியங்களில் கற்பியல்

5. சங்க கால மகளிர் வாழ்வியல்
க.திலகவதி-1996
நெறி: கு.வே.பாலசுப்பிரமணியம்
1. சங்க கால மகளிர் வாழ்ந்த சமுதாயச் சூழல்
2. சங்ககால இல்லறத்தில் மகளிர் பங்கு
3. சங்க கால மகளிர் கல்வி, கலை, விளையாட்டுத் தொழிற்பகுப்புகள்
4. சங்க கால மகளிர் வாழ்க்கை மரபுகள்
5. சங்க கால மகளிர் ஆடை அணிகலன்களும் ஒப்பனைக் கலைத்திறனும்
6. சங்க கால மகளிரும், பிற்கால மகளிரும் ஏனைச் சமூக மகளிரும்

6. சங்க இலக்கியப் பெண்களால் வெளிப்படும் மனிதநேய உறவுகள்
மு.அன்புச்செல்வி-1998
நெறி: மு.இளமுருகன்
1. மனித நேயம்
2. சங்க இலக்கியப் பெண்களின் தனிமனித நேயம்
3. குடும்ப உறவுடன் எழும் தனிமனித நேயம்
4. சமுதாய உறவுடன் எழும் தனிமனித நேயம்
5. பிற உயிரினங்களும் மனிதநேயமும்7. சங்க இலக்கியத்தில் குறுநில மன்னர்கள்
மா.அரங்கநாதன்-2000
நெறி: கு.இராசரெத்தினம்
1. குறுநில மன்னர் விளக்கமும் அறிமுகமும்
2. மூவேந்தரும் குறுநில மன்னரும்
3. வள்ளல் எழுவர்
4. குறுநில மன்னனின் சிறப்பு
5. வரலாற்றில் குறுநில மன்னர்

8. அக இலக்கியங்களில் உளவியல் பார்வை
கி.விமலா-2000
நெறி: சண்முக செல்வகணபதி
1. இலக்கியமும் உளவியலும்
2. சங்கப் பாடலும் உளவியலும்
3. முதல் கரு உரிப்பொருளும் உளவியலும்
4. கூற்று முறைகளும் உளவியலும்
5. துறைகள் காட்டும் உளவியல்


நீதி இலக்கிய ஆய்வேடு : 1
9. பிறதுறை நோக்கில் திருக்குறள்
த.செல்லம்மாள்-1999
நெறி: ந.சேஷாத்திரி
1. சமூகவியல் நோக்கில் திருக்குறள்
2. உளவியல் நோக்கில் திருக்குறள்
3. தகவல் தொடர்பியல் நோக்கில் திருக்குறள்
4. மொழி பெயர்ப்பியல் நோக்கில் திருக்குறள்
5. கல்வியல் நோக்கில் திருக்குறள்
6. மருத்துவ இயல் நோக்கில் திருக்குறள்
காப்பிய ஆய்வேடுகள் : 6
10. இருபதாம் நூற்றாண்டுக் கிறித்தவக் காப்பியங்கள் ஓர் மதிப்பீடு
கா.கலியபெருமாள்-1989
நெறி: கு.ப.கணேசன்
1. புறக்கூறுகள்
2. அகக் கூறுகள்
3. பொதுக்கூறுகள்

11. கம்பராமாயணத்தில் உரையாடல் திறன்
ச.கணேசன்-1991
நெறி: சொ.சற்குணம்
1. உரையாடல் இலக்கணமும் பழஞ்செய்யுட்களுள் உரையாடலும்
2. காப்பியங்களுள் உரையாடல்
3. உரையாடல் தன்மைகளும் கையாளப்பெறும் உத்திகளும்
4. உரையாடலால் விளையும் சிக்கலும் அவற்றிற்கான தீர்வுகளும்
5. உரையாடலால் புலப்படும் மெய்ப்பாடுகள்

12. கம்பராமாயணத்தில் மரபுவழிச் செல்வாக்கு
கோ.வெ.நடராசன்-1994
நெறி: க.இராமையன்
1. மரபு விளக்கம்
2. இலக்கியச் செல்வாக்கு
3. இலக்கணச் செல்வாக்கு
4. பண்பாட்டுச் செல்வாக்கு
5. மரபும் மாற்றமும்

13. கம்பனில் உறவு முறைகள்
ஆ . முருகானந்தம் -1996
நெறி: வி.நாகராசன்
1. காப்பியங்களில் உறவுகள்
2. உறவுகளின் இயல்புகள்
3. கம்பனில் உறவின் வகைகள்-ஐ
4. கம்பனில் உறவின் வகைகள் -ஐஐ
5. கம்பனில் உறவல்ல உறவுகள்
6. கம்பனில் உறவின் முறைச் சிக்கல்கள் உறவு வெளிப்பாடுகள்

14. தேம்பாவணி கித்தேரி அம்மாள் அம்மானை
ஆ.ஜோசப் -1999
நெறி: ஆ.செகந்நாதன்
1. வீரமாமுனிவரின் வரலாறுகளும் படைப்புகளும்
2. இயேசு சபை வரலாற்றில் வீரமாமுனிவர்
3. தேம்பாவணிப் பின்னணி
4. கித்தேரி அம்மாள் அம்மானை பின்னணி
5. தேம்பாவணி-கித்தேரி அம்மாள் அம்மானை ஓர் ஆய்வு
6. பக்தி நிலையும் மக்கள் வழிபாடும்

15. நீலகேசியில் சமயக் கோட்பாடுகள்
பீ.மு.மன்சூர் -1991
நெறி: நா.இராசசேகரபாலன்
1. சமணவியல்
2. பௌத்தம்
3. ஆசீவகம்
4. உலகாயதம்
5. சாங்கியம்
6. வைசேடிகம்
7. மீமாம்சம்

பக்தி இலக்கிய ஆய்வேடுகள் : 4

16. திவ்ய பிரபந்தத்தில் தொன்மைக் கூறுகள்
தி.அரங்கநாதன் -1987
நெறி: பொன். சௌரி ராஜன்
1. தொன்மம்
2. தொன்மம் வளர்ந்த வரலாறு
3. அவதாரங்கள்
4. இராமன் கண்ணன் அவதாரங்கள்
5. புராணத் தொன்மங்கள்
6. ஆழ்வார்கள் பாடியுள்ள திறம்
7. சமயநோக்கு தத்துவநோக்கு

17. அகப்பொருள் நோக்கில் ஆழ்வார் பாடல்கள்
கு. கண்ணன் -1992
நெறி: சொ.சற்குணம்
1. அகப்பொருள் விளக்கம்
2. பக்திப்பாசுரங்களுள் அகப்பொருள் அமைந்ததற்கு காரணமும் பாசுரங்களின் அகப்பொருள் நெறியும்
3. நாயகநாயகி பாவம்
4. அகப்பொருள் பாசுரங்களில் தத்துவக் கருத்துக்கள்

18. பெரியபுராணம் சமூகவியல் திறனாய்வு
வே.சீதாலெட்சுமி -1993
நெறி: மு.சிவச்சந்திரன்
1. சேக்கிழார் வரலாறும் நூல்பின்புலமும்
2. சமூகவியலும் சமூக நிறுவனங்களும்
3. குடும்பம் சமூக நிறுவனம்
4. கல்வி-சமூக நிறுவனம்
5. பொருளாதாரம் சமூக நிறுவனம்
6. அரசு சமூக நிறுவனம்
7. சமயம்-சமூக நிறுவனம்
8. பழக்கவழக்கங்கள்

19. தமிழ் இலக்கியங்களில் அனுமன் வழிபாடு
க.பானுமதி-1995
நெறி: கு.வெ.பாலசுப்பிரமணியன்
1. வழிபாட்டின் தோற்றமும் வளர்ச்சியும்
2. அனுமன் என்னும் தெய்வம்
3. வைணவத்தில் அனுமன்
4. தமிழ் இலக்கியங்களில் அனுமன்
5. அனுமன் வழிபாடு
6. தமிழகத்தில் அனுமன் கோவில்கள்

சமய ஆய்வேடுகள் : 2

20. கிறித்தவத் தமிழ் வேதாகமத்தின் சமூகப்பண்பாட்டுத் தாக்கம்-ஓர் ஆய்வு
ஜே.பி. ஜெயக்குமார் -1994
நெறி: ந.சேஷாத்திரி
1. கிறித்தவத் தமிழ் வேதாகமத்தின் வரலாறு
2. தமிழ் வேதாகமும் கிறித்தவ சமயப் பரவலும்
3. பண்பாட்டு சுகவயப்பாடு : வேதநாயக சாஸ்திரியார்
4. விடுதலை இறையியலும் பல்சமய இறையியலும் இராமலிங்கரும்-வேத நாயகரும்

21. தமிழ்ச் சித்தர் பாடல்களும் விவிலியமும்
மோசசு மைக்கேல் டாரடே-1991
நெறி: இரா.செயபால்
1. தமிழ்ச் சித்தர்கள் பொது அறிமுகம்
2. தமிழ்ச் சித்தாகள் கடவுட் கொள்கைகள்
3. விவிலியத்தின் கடவுட் கொள்கைகள்
4. சித்தர்களின் கடவுட் கொள்கைகளும் விவிலிய கடவுட் கொள்கைகளும் ஒற்றுமை
5. சித்தர்களின் கடவுட் கொள்கைகளும், விவிலிய கடவுட் கொள்கைகளும் வேற்றுமை
6. சித்தர் பாடல்களும் விவிலியமும் சமுதாயத்திற்கு வழங்கும் கடவுட் கொள்கைகள்பாரத ஆய்வேடுகள் : 2

22. பாரதக் கதைப்பாடல்கள்-ஓர் ஆய்வு
தி.பூங்குன்றன்-1986
நெறி: அ.விசுவநாதன்
1. ஆய்வுக் கதைப் பாடல்களின் சுருக்கமும் கருத்தும்
2. கதைப் பாடல்கள் வரலாறும் அமைப்புக் கூறுகளும்
3. அணிகளின் எளிமையும் இனிமையும்
4. பழமொழி ஆட்சிகள்
5. இயற்கை மீக்கூறுகள்
6. கதைப் பாடல்கள் காட்டும் சமுதாய வாழ்வியல்
7. விவிலியத்திற்குரிய பாரதங்களும் பாரதக் கதைப் பாடல்களும் ஒப்பீடு
8. செவ்விலக்கிய பாரதங்களும் கதைப் பாடல்களும் பாத்திரங்கள் ஒப்பீடு
9. கதைப் பாடல்களின் யாப்பு
10. கதைப்பாடல் ஆசிரியர்களின் பல்துறைப் புலமை

23. வில்லி பாரதத்தில் முரண்பாட்டு உத்திகள்
ந.சாந்தி-1996
நெறி: தா.வே.வீராசாமி
1. முரண்பாட்டு உத்தியும் அதன் வகைகளும்
2. காப்பியக் கட்டமைப்பும் முரண்பாட்டு உத்திகளும்
3. பாத்திரப்படைப்பும் முரண்பாட்டு உத்திகளும்
4. வருணனைகளும் முரண்பாட்டு உத்திகளும்
5. மொழிநடையும் முரண்பாட்டு உத்திகளும்

கோயில் ஆய்வேடுகள் : 5
24. புதுக்கோட்டை மாவட்டத்தின் சிவன் கோயில்கள்
வ.இளங்கோ -1987
நெறி: கோ.சிவகுருநாதன்
1. குடைவரைக்கோயில்கள் அமைப்பும் காலமும்
2. கட்டுமானக் கோயில்கள் அமைப்பும் காலமும்
3. கோயிற் கலைகள்
4. கோயில் ஆட்சி முறை
5. வழிபாடும் விழாக்களும்
6. மூர்த்தி, தீர்த்த தலச்சிறப்பு
7. சமுதாய வளர்ச்சியில் கோயில் பணிகள்

25. திருவையாறு ஏழூர்க் கோயில்களும் பல்லக்குத் திருவிழாவும்
ஆ.சண்முகம்பிள்ளை-1994
நெறி: சோ.தெய்வநாயகம்
1. திருவையாற்றுக் கோயில்
2. திருப்பழனக் கோயில்
3. திருச்செந்துறைக் கோயில்
4. திருவேதிக்குடிக் கோயில்
5. திருக்கண்டியூர்க் கோயில்
6. திருப்பூந்திருத்திக் கோயில்
7. திருநெய்தானக் கோயில்
8. ஏழூர் பல்லக்கு விழா

26. காட்டு மன்னார்கோயில் வட்டச் சைவத் திருக்கோயில்கள் ஓர் ஆய்வு
த.சின்னத்தம்பி-1994
நெறி: பாஸ்கரன்
1. வரலாறும் இலக்கியமும்
2. தலப்புராணச் செய்திகள்
3. கோயிற்கலைகள்
4. வழிபாடும் விழாக்களும்
5. பிறதிருக் கோயில்கள்

27. பழுவூர்க் கோயில்கள்
அர.சுசிலா -1997
நெறி: பா. பாலசுப்பிரமணியன்
1. தமிழகக் கோயிற் கட்டடக்கலை தோற்றமும் வளர்ச்சியும்
2. பழுவேட்டரைய மன்னர்களின் வரலாறு
3. பழுவூர்க் கோயில்கள் கட்டமைப்பும் சிற்பச்செறிவும்
4. பழுவூர்க் கோயில்களும் சமுதாயமும்

28. தமிழகக் கிறித்தவத் திருத்தலங்கள்
மா.பீட்டர் முடியப்பன்-2001
நெறி: கா. ஜோசப் கலியபெருமாள்
1. கிறித்தவ வளர்ச்சி
2. திருவிவிலியம் திருச்சபை பார்வையில் மரியாள்
3. மரியன்னை திருத்தலங்கள்
4. தாய்த் தெய்வ வழிபாடு
5. திருத்தலச் சமுதாயப் பார்வையும் பயன்பாடும்
இக்கால இலக்கியங்கள்
நாவல் ஆய்வேடுகள்: 16

29. சாண்டில்யன் வரலாற்று நாவல்கள்
அ. பாலு -1989
நெறி: சி.பாலசுப்பிரமணியன்
1. வரலாற்று நாவல்களின் தோற்றமும் வளர்ச்சியும்
2. சாண்டில்யனின் வரலாற்று நாவல்கள் ஓர் அறிமுகம்
3. பாத்திரப்படைப்பு
4. உத்திமுறைகள்
5. வருணனையும் கருத்துப் புலப்பாடும்
6. சாண்டில்யனின் சமுதாயச் சிந்தனைகள்

30. தமிழில் வட்டார வழக்கு நாவல்களின் தோற்றமும் வளர்ச்சியும் ஆர் சண்முகசுந்தரம் நாவல்களில் காணும் வட்டார வழக்கு சிறப்பாய்வு
எஸ்.சாயி யூரேகா-1992
நெறி: க. முருகன்
1. சண்முகசுந்தரம் ஒரு நாவலாசிரியராக
2. வட்டார வழக்கு நாவல்கள் தோற்றமும் வளர்ச்சியும்
3. பாத்திரப்படைப்பு
4. சண்முகசுந்தரம் நாவல்களில் தொடர்ந்தவாதம்
5. சண்முகசுந்தரம் நாவல்களில் கொங்குநாட்டு மக்கள் வாழ்க்கை முறை
6. சண்முகசுந்தரம் நாவல்களில் மொழிபெயர்ப்பு நூல்கள்


31. பெண் எழுத்தாளர் நாவல்களில் பெண்களின் சிக்கல்

இரா.சோபனா -1993
நெறி: மு. நிலாமணி
1. பெண் எழுத்தாளர்களும் நாவல்களும்
2. கால வரலாற்றில் பெண்களின் சிக்கல்கள்
3. சிவசங்கரி நாவல்களில் பெண்களின் சிக்கல்கள்
4. தீர்வுகளும் பெண்ணுரிமைச் சட்டங்களும்

32. மு.வ. நாவல்களில் அறக்கருத்துக்கள்
சுவாமிக் கண்ணு செல்லையா -1993
நெறி: கு.வெ.பாலசுப்பிரமணியன்
1. அறமும் நாவலும்
2. மு.வ.நாவல்களில் பாத்திரங்களும் அறங்கூறலும்
3. மு.வ.நாவல்களில் அறவோர்
4. அறக்கருத்துக்களை எடுத்துரைக்கும் முறை
5. மு.வ.நாவல்களில் அறம்

33. தி.ஜானகிராமன் நாவல்களில் பெண்கள்
க.பரிமளம்-1993
நெறி: தேவதத்தா
1. பெண்ணியமும் பெண்ணித் திறனாய்வும்
2. பெண் விடுதலைபற்றி தி.ஜானகிராமன்
3. தி.ஜானகிராமன் நாவல்கள் புலப்படுத்தும் பெண் பற்றிய ஆடவரின் புனைவுகள்
4. தி.ஜாகி நாவல்களில் பெண் பாலியல் ஒழுங்கு மீறல்கள் காரணங்களும் தீர்வுகளும்
5. பாலியலும் உளவியலும்
6. சக்தி தத்துவமும் தி.ஜா.வின் அன்புக் கோட்பாடும்

34. தமிழ் நாவல்களில் வர்க்கப் போராட்டம்
சு. தமிழரசி -1994
நெறி: பெ. சுபாசு சந்திரபோசு
1. நாவல்களில் வர்க்கப் போராட்டம்
2. வர்க்கப் போராட்ட நாவலும் சமுதாயமும்
3. வர்க்கப் போராட்ட நாவல்களில் சமூகநோக்கு
4. வர்க்கப் போராட்ட நாவல்களில் படைப்பு முறைகள்
5. வர்க்கப் போராட்ட நாவல்களில் கருத்து மாற்றம்

35. தமிழாக்கம் பெற்ற இந்திய நாவல்கள்
வ.நாராயணநம்பி -1994
நெறி: மா. இராமலிங்கம்
1. தமிழாக்கம் பெற்ற இந்திய நாவல்கள் ஓர் அறிமுகம்
2. கோட்பாடுகளும் இந்திய நாவல்களும்
3. படைப்பும் படைப்பாளியும்
4. இந்திய நாவல்களும் இந்தியத் தன்மைகளும்
5. தமிழாக்கம் பெற்ற இந்திய நாவல்கள் மதிப்பீடு

36. சமுதாய நோக்கில் குமரி மாவட்ட நாவல்கள்
கஸ்தூரிபாய் ஜான்சன் டேனியல் -1994
நெறி: இந்திராமனுவேல்
1. குமரி மாவட்ட வரலாறு ஆசிரியர்கள் கதைச் சுருக்கம்
2. சமூகப் புதினங்கள்: சமூகவியல் சமூக நிறுவனம்
3. குடும்ப நிறுவனம்
4. சமய நிறுவனம்
5. பொருளாதார நிறுவனம்
6. அரசியல் நிறுவனம்
7. கல்வி நிறுவனம் பொழுதுபோக்கு நிறுவனம்

37. தென்னிந்திய நாவல்களில் தேசிய உணர்வு
சி.பானுமதி -1995
நெறி: கி. இராசா
1. தேசியம் என்ற கருத்துப்படிவம் சில விளக்கங்கள்
2. ஒற்றுமை விழிப்புணர்வு கருத்து கொள்ளுதலும் உருப்பெறலும்
3. சமுதாய இணக்கம் கால்கொள்ளுதலும் வேரூன்றலும்
4. பெண்ணுரிமை அறிமுகமும் ஆற்றலும்


38. தமிழ்ப் புதினங்களில் குடும்ப உறவுச்சிதைவு
பெ. பாக்கிய ரதி -1995
நெறி: ப.ச. ஏசுதாசன்
1. குடும்பம் உறவு சிதைவு
2. கணவன் மனைவி உறவுச் சிதைவு முதற்பகுதி
3. கணவன் மனைவி உறவுச் சிதைவு இரண்டாம் பகுதி
4. பெற்றோர் பிள்ளைகள் உறவுச் சிதைவு
5. பிறஉறவுச் சிதைவு
6. வர்க்க நிலையில் குடும்ப உறவுச் சிதைவு

39. தமிழ் வரலாற்று நாவல்களின் வடிவும் செய்திறனும்
இ. காந்தி -1997
நெறி: மா. இராமலிங்கம்
1. தமிழ் வரலாற்று நாவல்களின் தோற்றமும் வளர்ச்சியும்
2. வரலாற்று நாவல் விளக்கம்
3. வரலாறும் புனைவும்
4. வரலாற்று முரண்கள். வார்ப்பும் வனப்பும்

40. தமிழில் வட்டார நாவல்கள் ஓர் ஆய்வு
பொ. வெள்ளைச் சாமி -1998
நெறி: ஆ. ஆலிஸ்
1. வார மாத நாவல்களின் தோற்றமும் வளர்ச்சி மற்றம் நாவலாசிரியர்கள்
2. உள்ளடக்கம்
3. வகைகளும் வடிவங்களும்
4. உத்திகள்
5. இலக்கியத் தரம்
6. வார மாத நாவல்கள் பற்றிய வாசகர்களின் நோக்கு

41. வாஸந்தி நாவல்கள் ஓர் ஆய்வு
ச. பரிமளா -1998
நெறி: இரா. காசிராஜன்
1. சமூகவியல்
2. உளவியல்
3. பொதுநிலை
4. நடையியல்
42. தமிழ்ப் புதினங்களில் தொழிலாளர் பிரச்சனைகள்
ப. கிருஷ்ணன் -2000
நெறி: அ.ஆலிஸ்
1. பொதுவுடைமை இயக்கத்தின் வரலாறு
2. தொழிலாளர் பிரச்சனைகள்
3. தொழிலாளர் பிரச்சனைக்கான காரணிகள்
4. பொதுவுடைமை நோக்கு
5. போராட்டமும் விளைவுகளும்
6. இலக்கியப் படைப்பாற்றல் திறன்

43. ராஜம் கிருஷ்ணன் நாவல்களில் பண்பாட்டுப் படிமக் குறியீடுகள் ஓர் ஆய்வு
புஷ்பராணி -2000
நெறி: எஸ்.இராமமூர்த்தி
1. பகுதி நோக்கு ஈர்ப்பு படிமக் குறியீடுகள்
2. பிண்டநோக்கு வார்ப்பமைதிக் குறியீடுகள்
3. வார்பு நிலைக் கொள்கைப் படிமக் குறியீடுகள்

44. திலகவதியின் புதினங்களில் பெண்ணியம்
க. ஜெயசிரி -2000
நெறி: அ. அந்தோனி குருசு
1. பெண்ணியம் பொதுவரையறை
2. திலகவதியின் பெண்ணிய உலகம்
3. திலகவதியார் புதினங்களில் ஆணாதிக்கம்
4. திலகவதி புதினங்களில் குடும்பச் சித்தரிப்பு பெண்ணிய நோக்கு
5. திலகவதியின் புதினங்களில் பெண்ணியச் சிக்கல்களும் தீர்வுகளும்
6. தமிழ் அறநெறி மதிப்புகளும் அக்காலப் பெண்ணிய நட்புகளும்
7. பெண்ணியச் சிந்தனைகள் வெளிப்படுத்த திலகவதி கையாளும் உத்திகள்

சிறுகதை ஆய்வேடுகள் : 2

45. தமிழ்ச் சிறுகதைகளில் நவீனத்துவம் (1961-1985)
செ.துரைராஜ் -1992
நெறி: மா.இராமலிங்கம்
1. நவீனத்துவம் வரையறை
2. புதிய கதைப் பொருள்கள்
3. வடிவம் மற்றும் செய்திறனில் புதுமை
4. புதுநெறிச் சிறுகதையாளர்கள் (வகை மாதிரிகள்)

46. தமிழ்ச் சிறுகதைகளில் வாழ்வியல் மதிப்பும் மாற்றமும்
பெ. வைரமூர்த்தி -2000
நெறி: பெ. சுபாசுசந்திரபோசு
1. மதிப்பும் மாற்றமும் (சமூகவியல் நோக்கில்)
2. சமூக நிறுவனமும் மக்கள் வாழ்வும்
3. தமிழ்ச் சிறுகதைகளில் மதிப்பும் மாற்றத்திற்கான காரணிகளும்
4. காலச்சூழலும் மதிப்பு மாற்றமும்
5. தமிழ்ச் சிறுகதைகளில் புதிய மதிப்புகள்

கவிதை ஆய்வேடுகள் : 3

47. கண்ணதாசன் கவிதைகளில் சமுதாயக் கூறுகள்
சு.ப.கதிரேசன்-1990
நெறி: இராம பெரிய கருப்பன்
1. சமுதாய உணர்வுக்கான அடிப்படைத் தரக்குரவுகள்
2. சமூகவியல்
3. பொருளியல்
4. அரசியல்
5. அருளியல்

48. தமிழ்க் கவிதைகளில் புனைவியல்
சி. வாசுகி -1992
நெறி: ம.மதியழகன்
1. புனைவியல் தோற்றமும் வளர்ச்சியும்
2. புனைவியல் தேசியம்
3. புனைவியலில் சமுதாயம்
4. புனைவியலில் இயற்கை
5. புனைவியல் இலக்கிய உத்திகள்
6. புனைவியல் காப்பியம்

49. கவிஞர் முடியரசன் கவிதைகளில் சமுதாயத் தாக்கம்
ச. நாகராசன் 1995
நெறி: கு.ப.கணேசன்
1. கவிஞர் முடியரசனின் வாழ்வும் பணியும்
2. கவிஞர் முடியரசனின் கவிதைப் படைப்புகள்
3. கவிஞர் முடியரசரின் காலத்திய தமிழகச் சூழல்
4. கவிஞர் முடியரசன் கவிதைகளில் சமுதாயத் தாக்கம்


நாடக ஆய்வேடு -1


50. கிறித்தவ வாசகப் பாக்கள்

பெ.அமலதாசு-1994
நெறி: ப.ச.ஏசுதாசன்
1. தமிழில் நாடகம் வாசகப்பா ஒரு நோக்கு
2. வாசகப் பாக்கள் கூறும் அடியார் வரலாறுகள்
3. வாசகப் பாக்கள் வெளிப்படுத்தும் மெய்ப்பாடுகள்
4. வாசகப் பாக்களில் நாடக உத்திகள்
5. வாசகப் பாக்களில் பாத்திரப் பண்புகள்
6. வாசகப் பாக்களில் திருச்சபை நெறிகள்
7. வாசகப் பாக்களில் இலக்கிய அறக்கருத்துக்களின் செல்வாக்கு

இதழ்கள் ஆய்வேடுகள் 7

51. தெ.ச. சொக்கலிங்கத்தின் காந்தி இதழ் ஓர் ஆய்வு
பா. மதிவாணன் -1989
நெறி: வெ.காத்தையன்
1. ஆய்வுப் பொருளும் முறையும்
2. தமிழிதழியல் வரலாற்றுப் போக்கு ஓர் அறிமுகம்
3. தெ.ச.சொ.வின் வாழ்க்கையும் கருத்துக்களும்
4. காந்தி இதழ் வரலாறு
5. காந்தி இதழ் அமைப்பும் உத்தியும்
6. காந்தி இதழ் உள்ளடக்கம்52. முன்னோடித் தமிழ் இதழாசிரியர் சுப்பிரமணிய பாரதியார்
ப. இறையரசன் -1991
நெறி: இரா. செயபால்
1. இதழ்களின் தோற்றமும் வளர்ச்சியும்
2. பாரதியார் பங்காற்றிய இதழ்கள்
3. ஆசிரிய உரைகளும் சிறப்பக் கட்டுரைகளும்
4. பாரதியாரின் இதழியல் நடை
5. பாரதியாரும் இதழியலும்

53. தமிழிலக்கியத் திறனாய்வு வரலாற்றில் தாமரை இதழின் பங்களிப்பு
சார.செந்தில் குமார் -1992
நெறி: இரா.சண்முகவேல்
1. திறனாய்வும் தமிழிலக்கியமும்
2. தமிழ் இதழியல் வரலாற்றில் தாமரை
3. தாமரையின் திறனாய்வு வெளியீட்டு முறைகள்
4. தாமரையின் திறனாய்வில் தமிழிலக்கிங்கள்
5. தாமரையின் திறனாய்வாளர்கள்

54. இலக்கிய வளர்ச்சிக்கு தமிழ் நாளிதழ் இணைப்பு மலர்களின் பங்கு
ஆ. நாகராசன் -1996
நெறி: கி. இராசா
1. இணைப்பு மலர்களின் தோற்றமும் வளர்ச்சியும்
2. இணைப்பு மலர்களின் படைப்பிலக்கியப் போக்கு
3. இணைப்பு மலர்களில் சிறுவர் இலக்கியம்
4. இணைப்பு மலர்களில் துணுக்கு இலக்கியச் செல்வாக்கு
5. இணைப்பு மலர்களில் கட்டுரை இலக்கியம்

55. தமிழில் சைவ சமய இதழ்கள்
பி. இன்னமுது -2000
நெறி: மு.இளமுருகன்
1. இதழின் தோற்றமும் அமைப்பும்
2. சைவ மூலங்கள்
3. சைவத்துறைச் சாதனங்கள்
4. சைவ இதழ்களில் வாழ்வியல்
5. உத்திகள்

56. தமிழ் இதழில் அறிவியல் சிந்தனைகள்
வை.இராமன் -2000
நெறி: சொ.சற்குணம்
1. கலைக்கதிரும் மக்கள் வழிப்பயன்பாடும்
2. தலைப்புச் செய்திகளும் கருத்துருவாக்கமும்
3. மனித வாழ்க்கை நடைமுறைக் கருத்துக்கள்
4. புதிய கண்டுபிடிப்புக்களின் மூலம் சமுதாய உருவாக்கம்
5. புதிய நோக்கில் அறிவியல்

57. தொடர்பியல் இந்தியா டுடே-துக்ளக் இதழ்களின் அரசியல்

கா.வாசுதேவன்
நெறி: பெ.சுபாசு சந்திரபோசு
1. தொடர்பியலில் இதழியல்
2. தொர்பியல் சாதனங்களில் அரசியல்
3. அரசியல் செய்திகளின் வெளிப்பாட்டில் இந்தியாடுடே-துக்ளக்
4. இந்தியாடுடே துக்ளக் இதழ்களின் உள்ளடக்கங்களில் அரசியல்
5. இந்தியா டுடே துக்ளக் அரசியல் மதிப்பீடு

அகராதி ஆய்வேடு : 1
58. தமிழ் அகராதிகளில் சொற்பொருள் வளர்ச்சி
இரா.திருநாவுக்கரசு-1995
நெறி: எச்.சித்ரபுத்ரபிள்ளை
1. அகராதியில் அறிமுகம்
2. தமிழ் அகராதிகளின் வளர்ச்சி வரலாறு
3. அகராதி சொற்பொருள் நெறிமுறைகள்
4. தமிழ் ஒருமொழி அகராதிகளில் சொற்பொருள்
5. தமிழ் இருமொழி அகராதிகளில் சொற்பொருள்
6. தமிழ் ஒருமொழி, இருமொழி அகராதிகளில் சொற்பொருள் வளர்ச்சி ஒப்பாய்வு
தகவல் தொடர்பு ஆய்வேடுகள்: 4

59. தொலைக்காட்சி விளம்பரங்கள்

இரா.விஜயராணி-1992
நெறி: இ.சுந்தரமூர்த்தி
1. விளம்பரக்கலை வரலாறு
2. தகவல் தொடர்புச் சாதனங்கள்
3. தொலைக்காட்சி விளம்பரங்கள்
4. தொலைக்காட்சி விளம்பரங்கள் சமூக உறவு
5. தொலைக்காட்சி விளம்பரங்கள் உத்திகள்
6. தொலைக்காட்சி விளம்பரங்கள் மொழி அமைப்பு

60. தொலைக்காட்சி வருகையால் தமிழக மக்களிடம் ஏற்பட்ட பண்பாட்டு நாகரீக மாறுபாடுகள் -ஓர் ஆய்வு
க.அன்பழகன்--1993
நெறி: ந.சேஷாத்திரி
1. மக்கள் தகவல் தொடர்புக் கருவிகளும் தொலைக்காட்சியும்
2. தொலைக்காட்சியின் தோற்றமும் வளர்ச்சியும்
3. பண்பாட்டுக் கூறுகளும் தொலைக்காட்சியின் வழி மாற்றமும்
4. நாகரீகக் கூறுகளும் தொலைக்காட்சியின் வழிமாற்றமும்
5. தொலைக்காட்சியின் வழி விளைவுகள்


61. தமிழ்த் திரையுலகுக்கு கலைஞர் மு.கருணாநிதியின் கொடை
பெ.இராமலிங்கம்-1996
நெறி: கோ.தெய்வநாயகம்
1. திரைப்பட வரலாற்றில் தமிழகமும் திராவிட இயக்கமும்
2. திரைத்துறையில் திராவிட இயக்கப்பணிகள்
3. கலைஞரின் திரைக்கதைகள்
4. கலைஞரின் திரை உரையாடற் பணிகள்
5. கலைஞரின் திரைப்பாடற் பாணிகள்
6. திரை எழுத்துத் துறையில் கலைஞரின் தாக்கம்

62. வைரமுத்துவின் திரைப்பாடல்கள்-ஓர் ஆய்வு
த.செந்தில்குமார்-1998
நெறி: பா.மதிவாணன்
1. வைரமுத்துவின் வாழ்வும் எழுத்தும்
2. சமூக நோக்கு
3. இயற்கை நேயம்
4. கவிதைகளும் பாடல்களும்
திறனாய்வு ஆய்வேடுகள்: 17

63. கி.ராஜநாராயணனின் படைப்பிலக்கியங்கள்
ச.பாரதி-1987
நெறி: சு.வெங்கடராமன்
1. வட்டார இலக்கியம்
2. கதைக்கரு
3. கதை வடிவம்
4. மொழிநடை
5. கதைமாந்தர்கள்
6. சமூக மதிப்புகளும மதிப்பு மாற்றங்களும்
7. கி.ரா.காட்டும் கரிசல் உலகம்


64. தமிழிலக்கியங்கள் காட்டும் நட்புக் கோட்பாடு
ப.நீலா-1988
நெறி: கு.சுந்தரமூர்த்தி
1. இலக்கிய விளக்கியல்
2. நட்பு பகை விளக்கவியல்
3. பண்பு விளக்கவியல்
4. பாத்திர விளக்கவியல்
5. பொதுவியல்

65. பாரதிதாசன் படைப்புகளில் தமிழுணர்வு
சு.ஜெயலாபதி-1990
நெறி: வே.காத்தையன்
1. பாரதிதாசனுக்கு முன் மொழி உணர்வுச் சிந்தனைகள்
2. பாரதிதாசனுக்கு முன்மொழி உணர்வின் நோக்கும் போக்கும்
3. மொழியுணர்வூட்டத்தமிழ் சிறப்புணர்தல்
4. தமிழர் உயர்வுக்கு தமிழுணர்வூட்டல்
5. பிறமொழி ஆதிக்கத்தால் எழுந்த தமிழுணர்வு
6. பாரதிதாசன் மொழிஉணர்வால் விளைந்த தமிழ்வளர்ச்சிக் கருத்துக்கள்
7. பாரதிதாசனுக்குப் பின் பாரதிதாசனின் மொழி உணர்வுக் கிளர்வும் செல்வாக்கும்.

66. பாரதிதாசன் பாடல்களில் பழந்தமிழ் இலக்கியச் செல்வாக்கு
இர.சிவலிங்கம்-1990
நெறி: கு.ப.கணேசன்
1. அகவிலக்கியச் செல்வாக்கு
2. அகவிலக்கணச் செல்வாக்கு
3. புறவிலக்கியச் செல்வாக்கு
4. புறவிலக்கணச் செல்வாக்கு
5. திருக்குறள் செல்வாக்கு

67. காண்டேகரும் மு.வ.வும் ஓர் ஒப்பு நோக்கு
ப.குழந்தைசாமி-1992
நெறி: ப.ச.ஏசுதாசன்
1. ஆசிரியர் அறிமுகம்
2. கருவும் கதைச் சுருக்கமும்
3. மனிதநேயம்
4. காந்தியம்
5. ஒப்பு நோக்கு

68. பாரதிதாசன் படைப்புகளில் அரசியல்
தெ.திருஞானமூர்த்தி
நெறி: சொ.சற்குணம்
1. இந்தியத் தேசியம்
2. திராவிடத் தேசியம்
3. மார்க்சிய தேசியம்
4. தமிழ்த் தேசியம்
5. சாதி

69. இருபதாம் நூற்றாண்டு இலக்கியங்களில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு-ஓர் ஆய்வு
க.சிவகாமி-1993
நெறி: ந.சேஷாத்திரி
1. அறிவியலார் நோக்கில் சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வுக் கருத்துகள்
2. பாரதி படைப்புகளில் சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வுக் கருத்துக்கள்
3. பாரதிதாசன் படைப்புகளில் சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வுக் கருத்துக்கள்
4. புதுக்கவிதைகளில் சுற்றுப்புறச் சூழல் விழிப்புணர்வுக் கருத்துக்கள்
5. சிறுகதைகளில் சுற்றுப்புறச்சூழல் விழிப்புணர்வுக் கருத்துக்கள்
6. சுற்றுப்புறச் சூழல் சீர்கெடுவதால் பண்பாடு மாசடைதல்

70. வ.வே.சாமிநாதையரின் முகவுரைகள் ஓர் ஆய்வு
த.கோதண்டபாணி-1993
நெறி: பொ.அழகுக் கிருஷ்ணன்
1. முகவுரையின் தோற்றமும் வளர்ச்சியும்
2. சங்க இலக்கியப் பதிப்புகளில் முகவுரைகள்
3. காப்பியப் பதிப்புகளில் முகவுரைகள்
4. இலக்கணப் பதிப்புகளில் முகவுரைகள்
5. தலபுராணச் சிற்றிலக்கிய வகைகளில் முகவுரைகள்
6. முகவுரைகளில் ஆய்வுப் போக்கு
7. முகவுரைவழி உ.வே.சா.அவர்களின் பண்பு நலன்கள்

71. மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் படைப்புகளில் சேக்கிழாரின் தாக்கம்
நா.அரங்கராசன்-1993
நெறி: ப.ஆறுமுகம்
1. சேக்கிழார் மீனாட்சி சுந்தரம்பிள்ளை ஆகியோரின் வரலாறு
2. தொன்மம்
3. இயற்கை
4. சைவம்
5. மொழிநடை உத்தி

72. பெரியாரும் மனித நேயமும்
ம.நாராயணன்-1995
நெறி: ம.வி.சுதாகர்
1. பெரியாரின் இளமைப் பருவம்
2. விடுதலைப்போரில் பெரியாரின் பங்கு
3. பெரியாரும் பெண்கள் முன்னேற்றமும்
4. பெரியாரின் பண்பாடு-மனிதநேயம்
5. பெரியாரின் ஆக்கப்படைப்புகள்
6. பெரியாரும் சமுதாயப் போராட்டங்களும்
7. பெரியாரின் தனித்தன்மைகள்
73. மேலாண்மைப் பொன்னுச்சாமியின் படைப்புகள் ஓர் ஆய்வு
அ.கோவிந்தராசன்-1998
நெறி: க.சண்முகசுந்தரம்
1. புதினமும் சிறுகதையும் ஒரு கண்ணோட்டம்
2. கதையமைப்பு, கதைப்பின்னல், கதைக்கரு
3. பாத்திரப்படைப்பு
4. நடையும் உத்தியும்
5. படைப்பில் பின்னணி

74. தமிழ் வளர்ச்சியில் டாக்டர்.சி.இலக்குவனாரின் பங்களிப்பு
கா.மாரிமுத்து-1999
நெறி: ம.சத்தியமூர்த்தி
1. படைப்பிலக்கியப்பணி
2. வாழ்க்கை வரலாற்றிலக்கியப் பணி
3. இலக்கண ஆய்வு
4. மொழி ஆய்வு
5. பழந்தமிழிலக்கிய ஆய்வு
6. மொழி பெயர்ப்புத் திறன்
7. மொழி இனம் காக்க மேற்கொண்ட பணிகள்

75. தமிழ் ஆட்சிமொழியும் நடைமுறைத்தடைகளும்
ம.இராமச்சந்திரன்-2000
நெறி: க.சண்முகசுந்தரம்
1. தமிழ் ஆட்சிமொழி ஒரு பறவைப் பார்வை
2. தமிழ் ஆட்சிமொழி திட்டச் செயலாக்கம்
3. தமிழ் ஆட்சிமொழியும் போராட்டமும்
4. தமிழ் ஆட்சிமொழியும் கலைச் சொல்லாக்கமும்
5. தமிழ் ஆட்சி மொழியும் மொழியாக்கமும்
6. தமிழ் ஆட்சி மொழியும் நடைமுறைத் துறைகளும் தீர்வுகளும்

76. தமிழ் இலக்கியத்தில் இயற்பியல் கோட்பாடுகள்
ந.ராஜாராமன்-2000
நெறி: வெ.ராதாகிருஷ்ணன்
1. பொது இயற்பியலும் தமிழிலக்கியமும்
2. தமிழிலக்கியத்தில் ஈர்ப்பியலும் இயங்கியலும்
3. தமிழ் இலக்கியத்தில் வெப்பவியல்
4. தமிழ் இலக்கியத்தில் ஒலியியல்
5. தமிழ் இலக்கியத்தில் ஒளியியல்

77. பாரதிதாசனில் ரூசோவின் தாக்கம்
மு.அருணாசலம்-2001
நெறி: பெ.சுபாசு சந்திரபோசு
1. பிரெஞ்சு இந்திய சமுதாய அமைப்பு
2. ரூசோவும் பாரதிதாசனும்
3. பாரதிதாசன் படைப்புக்களில் சுதந்திரம்
4. பாரதிதாசன் படைப்புக்களில் சமத்துவம்
5. பாரதிதாசன் படைப்புக்களில் சகோதரத்துவம்
6. பாரதிதாசன் படைப்புக்களில் குடியரசு
7. பாரதிதாசன் படைப்புக்களில் கல்வி
8. பாரதிதாசன் படைப்புக்களில் சமயம்

78. தமிழ் பயிற்று மொழி சிக்கலும் தீர்வுகளும் ஓர் ஆய்வு
இரா.புகழேந்தி-2001
நெறி: ச.ஈஸ்வரன்
1. பயிற்று மொழி ஓர் அறிமுகம்
2. தமிழகமும் பயிற்று மொழியும்
3. தமிழ் பயிற்று மொழி கல்வியியல் சிக்கல்களும் தீர்வுகளும்
4. தமிழ் பயிற்றுமொழி நடைமுறை சிக்கல்களும் தீர்வுகளும்

79. ஆனந்தரங்கப் பிள்ளை நாட்குறிப்பு வழி அறியலாகும் புதுவை சமுதாயம்
இரா.வாசுகி-1990
நெறி: அ.அறிவுநம்பி
1. ஆனந்தரங்கர்
2. புதுச்சேரி
3. நாட்குறிப்புச் செய்திகள்
4. ஆனந்தரங்கர் கால அரசியல் போக்கு
5. வாணிகமும் பொருளாதாரமும்
6. பொருளாதார நிலை
7. குடும்பமும் மகளிரும்
8. சாதிசமயங்கள்
9. வாழ்க்கை முறை
10. திருவிழாக்களும் நம்பிக்கைகளும்

நாட்டுப்பறவியல் ஆய்வேடுகள் : 6

80. இலால்குடிவட்ட நாட்டுப்பறப் பாடல்கள் ஓராய்வு
ந.சேகர்-1988
நெறி: அ.தெட்சிணாமூர்த்தி
1. இலால்குடி வட்ட சமூகப் பொருளாதாரப் பின்னணி
2. நாட்டுப்புறப்பாடல் வகைகள்
3. நாட்டுப்புறப் பாடல்களில் இலக்கியப் பண்புகள்
4. சமுதாயச் செல்வாக்கு
5. குடும்பமும் உறவும்
6. நாகரிகமும் பண்பாடும்

81. திருப்பத்தூர் வட்டார மக்கட் பண்பு
இரா.சந்திரசேகரன்-1993
நெறி: இராம.பெரியகருப்பன்
1. திருப்பத்தூர் வட்டார அமைப்பும் மக்களும்
2. நம்பிக்கைகளும் பழக்க வழக்கங்களும்
3. குலமுறைச் சடங்குகள்
4. பெயரும் பெருமையும்
5. நாட்டுப்புறப் பாடல்கள்
6. விளையாட்டுக்களும் பொழுதுபோக்கும்
7. புலவர்களும் புரவலர்களும்

82. வடாற்காடு மாவட்ட நாட்டுப்புறக் கதைகள்
ச.தமிழ்மணி-1993
நெறி: ந.தர்மாரெட்டி
1. நாட்டுப்புறக் கதைகள் அறிமுகம்
2. நாட்டுப்புறக் கதைகள் கட்டமைப்பு உத்தி
3. நாட்டுப்புறக் கதைகளின் கதைக்கரு வகைப்பாடு
4. நாட்டுப்பறக் கதைமாந்தர்
5. நாட்டுப்புறக் கதைகளில் மாற்று வடிவங்கள்
6. திரிபு வடிவங்கள்
7. நாட்டுப்புறக் கதைகளில் மனித வடிவுகள்
8. நாட்டுப்புறக் கதைகளில் சமுதாய நிலை

83. தஞ்சை மாவட்ட நாட்டுப்புற நாடகங்கள் ஓர் ஆய்வு
மு.செல்வன்-1994
நெறி: இரா.செயபால்
1. இரணியன் பற்றிய செய்திகளும் தஞ்சை மாவட்ட பிரகலாதா சரித்திர நாடகமும்
2. பிரகலாதா சரித்திர நாடகத் தொடக்கநிலையும் வேறுபாடுகளும் கதை அமைப்பும்
3. பிரகலாதனின் குருகுல வாழ்க்கையால் அறியப்படும் செய்திகள்
4. பிரகலாதனுக்குச் செய்யப்படும் ஆக்கினைகளும் நரசிம்மமன் வெளிப்படுதலும்
5. நாடக அரங்கமும் பார்வையாளர்களும்


84. தஞ்சை மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள் ஒரு சமுதாய ஆய்வு
ஜி.வசந்தா-1995
நெறி: அ.சக்திவேல்
1. நாட்டுப்புறவியல்
2. மணமும் குடும்பமும்
3. சாதியும் தொழிலும்
4. அரசும் நிர்வாகமும்
5. பண்பாடும் மக்களும்

85. கள்ளர் மரபினரின் பட்டப் பெயர்கள்
வி.சிவபாதம்-1995
நெறி: அ.தட்சிணாமூர்த்தி
1. கள்ளர் இனம் ஒரு பொதுப்பார்வை
2. பட்டப் பெயர்கள் ஒரு பொதுப்பார்வை
3. கள்ளர் பட்டங்களும் பல்லவ மரபினரும்
4. கள்ளர் பட்டப் பெயர்களும் ஊர் பெயர்களும்
5. கள்ளர் பட்டப் பெயர்களும் சமூகத்தில் அவற்றின் சிறப்பிடமும்
6. சில பட்டப் பெயர்களின் விளக்கங்கள்

1 கருத்துகள்:

Aathira mullai said...

செந்தமிழ்ப் பாவை மேடம். வணக்கம் இது ஆதிரா முல்லை. டிசம்பர் மாத இந்தோ ஆசியாள் கவிஞர்கள் மாநாட்டில் கலந்து கொண்டேன். அதில் மகிழ்ச்சி. அதை விடவும் இந்த வலைத்தளத்தைக் கண்டதில் மகிழ்ச்சி. ஆய்வாளர்களுக்கு மட்டுமல்ல.... ஆய்வு நூல்களைத் தேடிப் படிக்க எண்ணும் அனைவருக்கும் நிறைவான இன்பத்தைத் தரும் வலைப்பதிவு இது. ஆய்வாளர், நெறியாளர், ஆய்வுத்தலைப்பு, பல்கலைக்கழகம் என்று கொடுத்துள்ள விபரங்கள் மிகவும் பயனுள்ளது. என் சல்யூட் தங்களுக்கு